தனது மேடிட்ட வயிற்றை கர்ப்பிணிப்பெண் வீடியோ எடுத்த போது மர்ம உருவம் தோன்றி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது மேடிட்ட வயிற்றில் குழந்தை நகர்வதை தனது கணவனுக்கு காட்ட வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளார். அப்போது மர்ம உருவம் ஒன்று திடீரென தோன்றி மறைய ஒருகணம் அச்சத்தில் புல்லரித்துப் போய் உள்ளார். அந்த வீடியோவை அவரது சகோதரி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். வீடியோவை பார்த்த பலரும் அந்தப் பெண்ணிற்கு வேறு குழந்தைகள் உள்ளனரா?
அல்லது செல்லப்பிராணிகள் ஏதேனும்வளர்க்கின்றாரா? என கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த கர்ப்பிணிப் பெண்ணின் சகோதரி அவளுக்கு வேறு எந்த குழந்தைகளும் இல்லை என்றும் அவளது வீட்டில் நாயும் பூனையும் கருப்பு இல்லை வெள்ளை நிறம்தான் என கூறியுள்ளார். வீடியோவை பார்த்த பலர் எதிர்மறை உணர்வை ஏற்படுத்துவதாகவும் அதன்பிறகு தூங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்