யானைக்குட்டி கின்னிக்கோழியுடன் விளையாடும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது
கின்னிக்கோழியுடன் யானைக்குட்டி ஒன்று விளையாடிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சி படுத்தி வருகின்றது. வெளியான காணொளியில் தாயின் அருகில் நின்று கொண்டிருந்த குட்டி யானை கின்னிக்கோழி ஒன்றை விடாமல் துரத்தி ஓடுகின்றது.
முதலில் ஒரு சுற்று முடிந்ததும் பிடிக்க முடியாமல் மீண்டும் துரத்துகிறது. ஒரு கட்டத்தில் யானை குட்டி கீழே விழுந்துவிட்டது. கீழே விழுந்ததும் குட்டி யானை தாயிடமே திரும்பி ஓடிவிட்டது. இந்தக் காட்சியுடன் நடிகர் வடிவேலுவின் காமெடி உடன் இணைத்து வெளியிட்டுள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மகிழ் காலை 😁 pic.twitter.com/kf0RFNwNhq
— அருள் மொழி வர்மன் 👑 (@jega2weets) June 30, 2020