Categories
Uncategorized தேசிய செய்திகள்

எங்கள் மருந்து கொரோனாவை குணமாக்கும் என கூறவில்லை பதஞ்சலி நிறுவனம் திடீர் பல்டி!!!

பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று நங்கள் கூறவில்லை என  தெரிவித்துள்ளது.

கடந்த 22ஆம் தேதி ராம்தேவ் அறிமுகப்படுத்திய கொரோனில் என்ற மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது என தடுத்துள்ள ஆயுஷ் அமைச்சகம், மருந்து குறித்து பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
இதை தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்ய பால்கிருஷ்ணா, உத்தராகண்ட் மாநில ஆயுஷ் அமைச்சகம் அனுப்பிய நோட்டீசுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் .”அந்த மருந்தை எடுத்துக் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு குணம் கிடைத்தது என்று மட்டுமே கூறியதாக குறிப்பிட்டுள்ள அவர், வேண்டுமானால் மீண்டும் கிளினிகல் சோதனைகளை நடத்த தயார் என்றும் பதிலளித்துள்ளார்”. மேலும் பதஞ்சலி நிறுவனத்தை அழிக்க சிலர் சதி திட்டம் தீட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |