Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வழக்கு பதிந்த சிபிசிஐடி …. கைதாகப்போகும் எஸ்.ஐ.கள் ? சூடுப்பிடிக்கும் வழக்கு …!!

இந்த வழக்கு பதிவின் தொடர்ச்சியாக என்று இரண்டு உதவி ஆய்வாளர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்தரவதை மரணம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்த கட்டங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் நேற்று நீதிமன்றத்தின் ஆணையின்படி விசாரணைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக நேரடி சாட்சியமாக இருந்த பெண் காவலர் வாக்குமூலம் என்பதும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு நேற்று சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சிபிசிஐடி போலீசார் முதல்கட்டமாக இன்று காலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பதிவின் தொடர்ச்சியாக என்று இரண்டு உதவி ஆய்வாளர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. மூத்த அதிகாரிகளும்சென்னையில் இருந்து சென்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் முகாமிட்டு இருக்கிறார்கள். கூடுதலான விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

Categories

Tech |