சாத்தன்குளம் காவல்நிலையத்தில் இரண்டாவது நாளாக தடவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றார்கள்.
சாத்தான்குளத்தில் தந்தை – மகனை காவல்துறையினரை தாக்கியதில் மரணம் அடைந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாமாக முன்வந்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு உத்தரவிட்டது. அதேபோல் தடயவியல் நிபுணர்களும் சென்று தடயங்களை சேகரித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து தடவியல் நிபுணர்கள் நேற்று காவல் நிலையத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். காவல் நிலையத்தில் உள்ள மேஜை, லத்தி உள்ளிட்ட பொருட்களில் ரத்தக் கறை படிந்து உள்ளதா ? என்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாகவும் தடவியல் நிபுணர்கள் சாத்தான்குளத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள்.
சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் இந்த ஆய்வில் வருவாய்துறையினரும் இருந்து வருகின்றார்கள். இன்று சிபிசிஐடி அதிகாரிகள் 10 குழுவாக விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.