Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாய் குறுக்கே சென்றதால் விபத்து… தந்தையும், மகளும் உயிரிழந்த சோகம்..!!

நாய் குறுக்கே சென்றதால் ஏற்பட்ட விபத்து காரணமாக பைக்கில் சென்ற தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது 42 ஆகிறது.. இவர் தன்னுடைய 10 வயது மகள் சுவிட்சாவுடன் இன்று அம்பாசமுத்திரத்திலிருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அகஸ்தியர்பட்டி மெயின் ரோட்டில் சென்றபோது நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்ததில், பைக்  நாயின் மேல் மோதி தொடர்ந்து எதிரே செங்கல் லோடு ஏற்றி வந்த டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வந்த தந்தை மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |