நடமாடும் தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள் என நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜூலை 1ம் தேதியான இன்று மருத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது. எனவே நாடு முழுவதும் இந்த தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது வரை இப்படி கொண்டாடியது இல்லை. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் அயராது உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு கடமைப்படும் விதமாக இந்த நாளை இந்திய மக்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், மம்தா பானர்ஜி அதிகபட்ச மரியாதை அளிக்கும் விதமாக இனி வரக்கூடிய வருடங்களில் ஜூலை ஒன்றாம் தேதியை அரசு விடுமுறையாக அனுசரித்து மருத்துவர்களை சிறப்பிக்கும் வகையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் மருத்துவ தினமான இன்று அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் இன்று உலக மருத்துவர்கள் தினம்!! மருத்துவத்தைத் தொழிலாக மட்டுமன்றி சேவையாகவும் பார்க்கும், நடமாடும் தெய்வங்களான மருத்துவர்கள் அனைவருக்கும், இக் கொரானா காலத்தில், என் நன்றியும் வாழ்த்தும்!! என்று தெரிவித்துள்ளார்.
இன்று உலக மருத்துவர்கள் தினம்!! மருத்துவத்தைத் தொழிலாக மட்டுமன்றி சேவையாகவும் பார்க்கும், நடமாடும் தெய்வங்களான மருத்துவர்கள் அனைவருக்கும், இக் கொரானா காலத்தில், என் நன்றியும் வாழ்த்தும்!!🙏🏼
— Vivekh actor (@Actor_Vivek) July 1, 2020