Categories
தேசிய செய்திகள்

கல்லூரி தேர்வு ரத்து…. பாரபட்சமின்றி எல்லாரும் பாஸ்…. விரைவில் அறிவிப்பு….!!

உத்திர பிரதேச மாநிலத்தில் கல்லூரி தேர்வை ரத்து செய்வதற்கான அறிவிப்பை அம்மாநில அரசு விரைவில் வெளியிடவுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு நடைபெறவிருந்த தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவிவந்தது. அதன்படி, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்து அரசு அறிவித்தது. கல்லூரி மாணவர்கள் தங்களது தேர்வு ரத்து செய்யப்படுமா என்று ஆவலோடு காத்திருந்தனர்.

தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரை ஒன்றை அம்மாநில அரசு ஏற்க முன்வந்துள்ளது. அதன்படி, கொரோனா பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது என்பது முடியாத காரியம் அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாரபட்சமின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை அறிவிக்க உள்ளது. இதனுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |