Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி MP கொடுத்த புகார்….. சூடுபிடிக்கும் விசாரணை… டிஜிபிக்கு நோட்டீஸ் ….!!

தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் மரண விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இந்திய அளவில் இதற்கான கண்டனக்குரல் எழுந்து வருகின்றன. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து வருகிறது. இதனை சிபிஐ விசாரணைக்கு கொடுக்க  தமிழக அரசும் முடிவு செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில், இந்த வழக்கு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது தேசிய மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரின் புகாரை அடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் தற்போது நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது. இதற்க்கு தமிழக டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, கோவில்பட்டி சிறை கண்காணிப்பாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடங்கிய நாளிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முறையான நீதி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் அடுத்தடுத்து பல கண்டன அறிக்கையை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் தமிழக அரசாங்கம் தலா 10 லட்சம் அறிவித்த பிறகு திமுக சார்பில் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தான் அதிமுக கட்சி சார்பில் 25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போதும் சாத்தான்குளம் மரணம் தொடர்பாக நியாயம் கேட்டு திமுக தொடர்ந்து களத்தில் நின்று கொண்டு இருக்கும் நிலையில் திமுக MP சார்பில் எடுக்கப்பட்ட முயற்சியில் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது  வரவேற்கக் கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |