Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசுக்கு எதிராக… ‘’ஸ்டாலினுடன் ரஜினி’’ கெத்து காட்டிய உதயநிதி…. அதிர்ச்சியில் அதிமுக …!!

சாத்தான்குளம் சம்பவத்தில் நடிகர் ரஜினிகாந்த முக.ஸ்டாலினுடன் இணைந்துள்ளது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் அங்குள்ள காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, போலீஸ் அதிகாரிகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து அவர்கள் மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழகம் முழுதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரித்து அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டது.

பல்வேறு திருப்பங்கள்:

அதைத்தொடர்ந்து நேற்று உயர்நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் அளித்த அறிக்கையில், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தன. ஜெயராஜ், பென்னிக்ஸ் இரவு முழுவதும் லத்தியால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் இந்த வழக்கில் வந்து கொண்டிருக்கும் இந்த நிலையில்தான் தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

கொந்தளிப்பு:

இந்த சம்பவம் அரங்கேறியது முதல் தொடர்ந்து வணிகர்கள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் களத்தில் நின்று நியாயத்திற்கான கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக தமிழக அரசு முதலில் இருவரும் பிற காரணங்களுக்காக உயிரிழந்தார்கள் என்றும், இதில் லாக்கப் டெத் இல்லை என்று சொல்லியது. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த மரணமடைந்த குடும்பத்தினருக்கு தலா 10 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதே போல நியாயம் கேட்டு திமுகவும் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தது.

திமுக கோரிக்கை:

திமுக சார்பில் நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் திமுக சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் என்று கூறியதோடு திமுக சார்பாக ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்து அக்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்துதான் அதிமுகவும் கட்சி சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரணம் என அறிவிக்கப்பட்டதோடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கனிமொழி – உதயநிதி:

அதே போல திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்ததையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.  அது மட்டுமல்லாமல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரடியாக சென்று ஆறுதல் கூறினார். இப்படி இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வகையில் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு திமுக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

ரஜினி கண்டனம்:

நடிகர் ரஜினிகாந்த் இன்று இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் சத்தியமாக தப்பித்து விட கூடாது என்று கண்டனம் தெரிவித்து ட்விட் செய்திருந்தார். இதை தனது ட்விட்க்கு பரிமாறிக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்,  தமிழக அரசை எழுப்பும் முயற்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இணைந்துள்ளார். அதில் தன்னையும் இணைத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி என்று பதிவிட்டார்.

ட்ரெண்டிங்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ்  குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்தார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவிக்காமல் இருந்தார். இது விவாதப் பொருளாக மாறிய தற்போது ரஜினி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக சாத்தான்குளம் விவகாரத்தில் பெரிய பெரிய பிரபல திரை பிரபலங்கள் என ஒட்டுமொத்தமாக ஒரே அணியில் நின்று நியாயத்தை கேட்டு அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்ட சத்தியமா_விடக்கூடாது என்ற வார்த்தை ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |