Categories
உலக செய்திகள்

ஓரமாக நின்ற பெண்…. வழிப்போக்கன் செய்த கொடூர செயல்… வீடியோவில் பதிவான காட்சி….!!

அமெரிக்காவில் பெண்ணின் கழுத்தை நெரித்து சாதுர்யமாக கைப்பையை திருடி சென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மான்ஹாட்டனில் அமைந்திருக்கும் ஒரு முதியவர் இல்லத்தின் முன்பு 64 வயது நிரம்பிய ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் திடீரென அப்பெண்ணின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார். செய்வதறியாது திகைத்து நின்ற நேரத்தில் அப்பெண்ணின் கைப்பையை எடுத்துக்கொண்டு அந்த நபர் ஒன்றும் தெரியாதது போல் நடந்து சென்றார்.

இக்காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. முழங்கைகளிலும், முழங்கால்களிலும் காயம் ஏற்பட்ட அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அப்பெண்ணை தாக்கி, கைபையை திருடி சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Categories

Tech |