கொரோனா களபணியாளர்களிடம் உண்மையை கூறுங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பானது தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக ஊரடங்கு ஒருபுறம் அமுலில் இருக்கும் நிலையில், மற்றொரு புறம் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிக அளவில் கூடிக்கொண்டே செல்கிறது.
தற்போது பரிசோதனையை தீவிரப்படுத்தும் விதமாக சென்னையில் வீடு வீடாக சென்று சுகாதார அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனவே சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில், உங்கள் வீட்டுக்கு வரும் கொரோனா களப்பணியாளர்கள் இடையே உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உண்மையை சொல்லி விடுங்கள் உண்மையை மறைக்கும் பட்சத்தில் விபரீதம் உங்களுக்குத்தான் நடைபெறும்.
உண்மையை கூறினால் நீங்கள் மட்டும் அல்லாமல் உங்களைச் சுற்றி இருக்கக் கூடிய அன்பானவர்களும், அக்கம்பக்கத்தினரும் சேர்த்து காப்பாற்றப்படுவார்கள் என்று கூறியதோடு, சமாளிப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தியோடு ஆரோக்கியமான மனநிலையும் தேவைப்படுகிறது. இந்த ஆரோக்கியமான மன நிலையைப் பெறுவதற்கு சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்பட்டுவரும் ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ள 044-46122300 , 044-25384520 என்ற எண்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.