ஜெயராஜ் , பென்னிக்ஸ் விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழி முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கே அவர்களை அடித்து துன்புறுத்தி, பின் கோவில்பட்டி சிறையில் அடைத்துள்ளனர். அங்கே அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இது காவல்துறையினர் செய்த கொலை என்று அவரது உணர்வு உறவினர்கள் மட்டுமல்லாமல் சில அமைப்பைச் சேர்ந்தவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், தற்போது இந்த பிரச்சனை நாடு முழுவதும் சீரியஸாக பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர் கட்சிகள் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திமுகவின் தூத்துக்குடி எம்பி கனிமொழி இந்த கொலை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
இவரது புகாரை ஏற்ற மனித உரிமைகள் ஆணையம், தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி கோவில்பட்டியில் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் இனியாவது நிலைமையை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.