வடகொரியாவில் மீண்டும் பாதுகாப்பான முறையில் பள்ளிகள் இயங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் வடகொரியாவில் இதுவரை எந்த ஒரு கொரோனா வழக்குகளும் பதிவாகவில்லை. இந்நிலையில் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றது. ஆனால் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு அங்கு பலமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என அச்சத்தில் இருந்து வரும் நிலையில், இவற்றுக்கு பதில் அளிக்கும் ஒருபகுதியாக வடகொரியா மீண்டும் அந்நாட்டு பள்ளிகளை திறந்துள்ளது. ஆனால் பொதுக்கூட்டங்களுக்கு அங்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு பொது இடங்களில் கூடுபவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். இதுவரை அங்கு தொற்று ஏற்படவில்லை என்றாலும் அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி உலக சுகாதார அமைப்புடன் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து வருகின்றது என தனிமைப்படுத்தப்பட்ட நாட்டிற்கான உலக சுகாதார அமைப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஜூன் 19 அன்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முக கவசம் அணிய அறிவுறுத்தியதோடு சலவை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.