கட்டுப்பாட்டை இழந்த கார் மருத்துவமனையின் உள்ளே இருந்தவர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பாயின்ட்மெண்ட் வாங்கிய 75 வயது பெண்மணி ஒருவர் மருத்துவமனை வந்த சமயம் தனது காரை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்துஅங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது . அதோடு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பாய்ந்து அங்கிருந்த நபர் ஒருவர் மீது மோதியது.
இதை எதிர்பாராத மருத்துவமனையில் இருந்தவர்கள் தெறித்து ஓடியுள்ளனர். பின்னர் பலர் உதவியுடன் கார் நிறுத்தப்பட்டது. ஆனால் கார் மோதிய நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். மேலும் நான்கு பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் இது குறித்து விசாரிக்கையில் வேண்டும் என்று செய்த செயல் இல்லை என தெரிவித்துள்ளனர். காரை ஓட்டிய பெண்மணிக்கு காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.