சாத்தான்குளத்தில் சந்தை – மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் நேற்று மாலை தான் ஆவணங்களை நெல்லை சரக டிஐஜியிடம் பெற்றுக் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவித்தபடியே வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இன்று காலை முதல் 12 குழுக்களாக சிபிசிஐடி போலீஸ் பிரிந்து இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து இடங்களிலும் விசாரணை நடைபெற்றது. குறிப்பாக சாத்தான்குளம் காவல் நிலையம், ஜெயராஜ் கடை, ஜெயராஜ் வீடு, அவரது உறவினர்கள், கோவில்பட்டி கிளை சிறை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, சாத்தான்குளம் அரசு மருத்துமனை என பல்வேறு இடங்களில் வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு 302 பிரிவு உட்பட நான்கு பிரிவுகள் கீழ் சிபிசிஐடி போலீசார் எஸ்.ஐ ரகு கணேஷை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட எஸ்.ஐ: