Categories
தேசிய செய்திகள்

ஆடுகளுக்கு கொரோனா…? மேற்க்கண்ட பரிசோதனையில் வெளியான உண்மை….!!

ஆட்டிறைச்சி மூலம் கொரோனா பரவுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அவர் வளர்த்து வந்த சில ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஆடுகளுக்கும் கொரோனா பரவி விட்டதாக அந்த ஊர் மக்கள் கூறிவந்த நிலையில், கால்நடை மருத்துவர்கள் உடனடியாக ஆடுகளை பரிசோதனை செய்தனர்.

அதில் ஆட்டிற்கு பிவிஆர் எனப்படும் ஆடுகளுக்கான பிளேக் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட அந்த ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தமிழக மக்களுக்கு கூறப்படுவது என்னவெனில், சமீபத்தில் தமிழகத்தில் ஆட்டிறைச்சி மூலமாக கொரோனா பரவுவதாக மீண்டும் வாட்ஸ்அப் வதந்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பு செல்லப் பிராணிகளான நாய் பூனை உள்ளிட்ட எந்த விலங்குகளிடமிருந்தும் கொரானா மனிதனுக்கு பரவாது என்று தெரிவித்து.

பின் அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாலும், தற்போது வரை நாய் பூனை ஆடு கோழி உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு கொரோனா பரவியதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அரசு சார்பிலேயே உரிய எச்சரிக்கை விடுக்கப்படும். அதுவரை தேவையற்ற வதந்திகளை நம்பாமல் கொரோனாவை ஆரோக்கியமான மனநிலையுடன் எதிர்த்துப் போராடலாம்.

Categories

Tech |