Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…செலவுகள் ஏற்படும்…அனுகூலம் உண்டு…!

மிதுன ராசி அன்பர்களே….!   இன்று காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாளாகும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து  சேர்வார்கள். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவுக்கு வந்ததாக இருக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தால் ஆதாயம் உண்டாகும். இன்று எதையும் ஆராய்ந்து அதன் பிறகு அதில் ஈடுபடும் மனநிலை ஏற்படும். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும்.

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலமும் உண்டாகும். வீடு வாகனங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். இன்று எந்த ஒரு முயற்சியிலும் நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். அது போதும் உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். அதேபோல் பழைய பாக்கிகள் வசூல் செய்யும் போது கோபம் கொள்ளாதீர்கள்.

காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாகும். காதலில் நல்ல வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும்.  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |