Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

போலீஸ் மிரட்டுகிறதா…? இனி பயம் வேண்டாம்…. தண்டனை கொடுக்க ஒரே வழி இது தான்….!!

காவல்துறையினர் மக்களை மதித்து மரியாதையுடன் நடத்த வைக்க கூடிய ஒரு வழிமுறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

தற்போது தமிழகமே சாத்தான்குள வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று  எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றது.

முதல் முறை அல்ல :

இதேபோன்று காவல்துறையினர் பொதுமக்களிடம் காட்டமாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை நினைவுபடுத்த வேண்டும் எனில், திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷாவை போக்குவரத்து துறை அதிகாரி தனது கால்களால் எட்டி உதைத்து கொலை செய்தார். இது நமக்கு ஞாபகம் இருக்கும். இது மட்டுமல்லாமல் ஏராளமான விஷயங்கள் உள்ளன. உதாரணத்திற்கு உங்கள் ஊரிலேயே உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் செல்லும் பொழுது அவர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டிருக்கலாம்.

தீர்வு தான் என்ன?

சரி போகட்டும் இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வுதான் என்ன? எங்கே சென்று முறையிடுவது? பொதுமக்கள் தவறு செய்தால் காவல்துறையினரிடம் புகார் அளிக்கிறோம். காவல்துறையே தவறு செய்தால் எங்கு போய் புகார் அளிக்க வேண்டும்? காவல்துறையினரிடமே காவல்துறை  தவறு செய்தார்கள் என்று புகார் அளிப்பது திருடன் கையில் வீட்டு சாவியை கொடுப்பதற்கு சமம். இப்படி செய்தால் எப்படி நீதி கிடைக்கும்.

PCA விளக்கம் :

இதற்காக தான் 1979 முதல் 1981 ஆம் ஆண்டுக்குள் PCA போலீஸ் கம்ப்ளைன்ட் அத்தாரிட்டி(Police Complaint Authority) என்னும் அமைப்பு மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இதன்படி காவல்துறை அதிகாரி தவறு செய்தால் பொதுமக்கள் இந்த அமைப்பில் புகார் அளிக்கலாம். அந்த புகாரை விசாரிக்கும் அமர்வில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி யாரேனும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதே போல் இந்த அமைப்பில் காவல் துறையைச் சார்ந்த ஒரு நபர் கூட இருக்கக் கூடாது. இந்த அமைப்பு நடத்தும் விசாரணையின் மூலம் காவல்துறையின் தவறுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அத்தனை தண்டனைகளையும் பெற்றுக்கொடுக்க முடியும். இந்த சட்டம் 1981 ஆம் ஆண்டு பல மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழகத்திலும் இது தற்போது நடைமுறையில் தான் உள்ளது. ஆனால் சரியாக இல்லை. அதற்கான காரணம் இந்த அமைப்பில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லோருமே காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய டிஜிபி, ஐஜி பல மாவட்டங்களைச் சேர்ந்த டிஎஸ்பி ஆகியோர்கள் தான். இதிலும் காவல்  துறையைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இங்கு சென்றாலும் தற்போது நீதி கிடைப்பது சிரமமாக தான் இருக்கும். நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் இந்த முறை சரியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

முறையான PCA வேண்டும் :

இந்த தகவல்கள் அனைத்தையும் தற்போது யூடியூபில் இருக்கக்கூடிய BLACKSHEEP உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்கள் #ImplementPCA என்ற hashtag மூலம் PCA அமைப்பை தமிழகத்தில் முழுமையாக முறையாக அமல்படுத்தினால் மட்டுமே காவல்துறையினர் இது போன்ற முறைகேடான விஷயங்களில் நடப்பதை தடுத்து நிறுத்த முடியும். அது வரையிலும், இதுபோன்ற தவறுகள் தொடரத்தான் செய்யும் என்று கூறி வருகின்றனர். தற்போது ஊரடங்கு காலத்தில் அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இதனை நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து விசாரித்து PCAவை ஒழுங்காக அமல்படுத்தினால் இங்கு குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த அமைப்பு முறையாக அமல்படுத்தினால் மட்டுமே காவல்துறைக்கு ஒரு பயம் இருக்கும். மக்கள் எல்லோரும் காவல்துறையை பார்த்து பயப்படுகிறார்கள். ஆனால் காவல்துறை அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பயப்படுகிறார்கள் தவிர மக்களுக்கு பயப்படுவதில்லை. எனவே காவல்துறை அதிகாரிகள் மக்களையும் மதித்து ஒரு மரியாதையுடன் அவர்களை நடத்த வேண்டும் எனில், இந்த PCA வை முறையாக அமல்படுத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |