துலாம் ராசி அன்பர்களே…! இன்று பிரபலங்களின் சந்திப்பு பெருமை கொடுப்பதாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். உங்களுடைய நிலைமை படிப்படியாகவே மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்ஸி துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான தொழில் இருக்கும். அதேபோல கமிஷன் ஏஜென்சி போன்று நடத்துபவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். அதே போலவே காதலர்களுக்கு இனிமை காண கூடிய சூழல் இருக்கும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.
வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஸ்டதையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.