Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…அலைச்சல் உண்டாகும்….பாராட்டும் புகழும் அதிகரிக்கும்.

கும்ப ராசி அன்பர்களே …!   இன்று வெற்றிச் செய்தி வந்து சேரும் நாளாக இருக்கும். பாராட்டும் புகழும் அதிகரிக்கும். இல்லம் தேடி இனிய தகவல்கள் வரலாம் உத்தியோக உயர்வு உறுதியாகும். வரன்கள் வாயில் தேடி வரும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சாதுர்யமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடும்.

குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பின்னர் அது சரியாகும். கணவர் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்து முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். அதனால் சிறிய செலவுகள் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூல் செய்வது மட்டும் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். தேவை இல்லாத விசயத்திற்கு கோபம் மட்டும் தலைதூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

குடும்ப பெரியவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். காதலர்கள் இன்று கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். பேச்சில் எப்போதுமே நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |