மீன ராசி அன்பர்களே…! சுப விரயங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். துணிந்து எடுத்த முடிவால் தொழில் வளர்ச்சி கூடும். வருங்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி கொடுக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் சங்கடங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும்.
முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். வீடு வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். காதலர்களுக்கு இன்று நாள் இனிமையான நாளாக இருக்கும்.
சுப விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.