சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ தலைமறைவு என தகவல் வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட காவல் துணை ஆய்வாளர் ரகு கணேஷ் விசாரணைக்கு ஆஜராகிய போது சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணனை தேடி சிபிசிஐடி போலீசார் அவரின் சொந்த ஊர் சென்ற போது அவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர் செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நடவடிக்கையை சிபிசிஐடி போலீசார் துரிதப்படுத்த வருகின்றனர்.