பள்ளி மாணவி காதலிக்காததால் அவர் மீது இளைஞர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்ற 19 வயது இளைஞன், அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் இனி இப்படி செய்யாதே என மாதேஷை கண்டித்துள்ளனர்.. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மாதேஷ் அந்த மனைவியை பழிவாங்க முடிவு செய்தார்.
இதற்காக கடைக்குச் சென்று எண்ணெய் வாங்கி வந்து வீட்டில் பாத்திரத்தில் வைத்து அதனை நன்கு காய்ச்சி சூடாக்கியுள்ளான் மாதேஷ்.. இதையடுத்து சம்பவத்தன்று இரவில் வழக்கம்போல தூங்கிக்கொண்டிருந்த மாணவியின் மீது ஜன்னல் வழியாக கொதிக்கும் எண்ணையை ஊற்றி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான்..
சூடான எண்ணெய் பட்டதும் அந்த மாணவி அலறித்துடித்தார். அவளின் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து தாயின் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.