Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: சாத்தான்குளம் மரணம் – காவலர் முத்துராஜ் கைது…. !!

சாத்தான்குளம் சித்ரவதை மரணம் தொடர்பாக தலைமறைவாக இருந்த காவலர் முருகனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் சித்ரவதை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு காவலர்களும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். 4 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் உதவி ஆய்வாளர் நேற்று நள்ளிரவு உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் தலைமறைவாக்கினர்.டிஜிபி திரிபாதி ஏடிஜிபி ஜெயந்த் முரளி ஆகியோரின் வழிகாட்டுதலில் இரவு முழுக்க சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமை ஆய்வாளர் முருகன் கைது செய்யப்பட்டனர். தற்போது இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு தலைமை காவலர் முத்துராஜும்  கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |