சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகு கணேஷ் 15 நாள் சிறையிலடைக்கப்பட்டார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பாக 4 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சிபிசிஐடியிடம் ஆஜராகினார். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதில் அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்தனர்.
இதன்படி தூத்துக்குடி நீதிமன்றத்தின் நீதிபதி ஹேமலதா முன்பு ரகு கணேஷை ஆஜர் படுத்தினர். இதில் சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான எதிராக ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி பேரூரணி கிளை சிறையில் எஸ்.ஐ ரகு கணேஷ் அடைக்கப்பட்டார். ஜூலை 16ஆம் தேதி எஸ்.ஐ. ரகு கணேஷை மீண்டும் ஆஜர்படுத்த முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹேமலதா உத்தரவு பிறப்பித்தார்.