Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை….!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தன்குளத்தில் தந்தை – மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி காவல்துறை கிடுபிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் எடுத்துக்கொண்டதில் இருந்து விசாரணையில் அதிவேக நடவடிக்கையாக பல்வேறு விஷயங்கள் நடைபெற்றன.பல்வேறு இடங்களுக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்தி வந்தார்கள்.

இந்த நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு காவல் துறையைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நேற்று இரவு கைது எஸ்.ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார். பிறகு நேற்று நள்ளிரவு மீதமிருந்த இரண்டு காவல்துறையை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தற்போது இன்று காலை சாத்தான்குளம் தந்தை – மகன் சித்திரவதை வழக்கில் காவலர் முத்துராஜன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது தந்தை – மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

Categories

Tech |