Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது – தொடரும் சிபிசிஐடி நடவடிக்கை …!!

தந்தை மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று சாத்தான்குளத்தில் கடைகள், வணிகர்கள், பென்னிக்ஸ் நண்பர்கள் என எல்லோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.நேற்று மாலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்ஷிடம் 5 மணி நேரம் தொடர் விசாரணை  நடைபெற்ற பின்பு அவர் நள்ளிரவு 12.30 மணி அளவில் கைது செய்யப்பட்டனர்.பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணி கிளை சிறையில் அடைக்கப்படுவார்.

அதனைத் தொடர்ந்து எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன்,  முத்துராஜ் ஆகியோரையும் நள்ளிரவு தொடங்கி காலை வரை அடுத்தடுத்து கைது செய்தனர்.இந்நிலையில் கோவில்பட்டி வழியாக தப்ப முயன்ற இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை கங்கைகொண்டான் பகுதியில் புடித்து சிபிசிஐடி போலீசார் காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |