Categories
தேசிய செய்திகள்

திருமணம் முடிந்து 8 மாதம்……கணவர் மற்றும் மாமனாரின் செயல்…இளம்பெண் தற்கொலை….!!

திருமணமாகி 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம்  கான்பூரை சேர்ந்த நிஷா மற்றும்  விஷ்ணு  தம்பதினருக்கு  கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அந்த நேரத்தில்  மகளை காண அங்கு வந்த அவர் தந்தை லட்சுமி நாராயணன். தனது மகள்  தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து   நிஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.காவல்துறை விசாரிக்கையில் நிஷாவின் தந்தை ” தன் மகளிடம் வரதட்சணை கேட்டு அவரின் கணவர் விஷ்ணு மற்றும் மாமனார் தயாளன் கொடுமைப்படுத்தியதாகவும் அதனால்தான் தனது மகள் இம்முடிவை எடுத்திருக்கலாம் ” என கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து  நிஷாவின் கணவர் விஷ்ணு மற்றும் தயாளனை கைது செய்யப்பட்டு  அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Categories

Tech |