மெக்சிகோவில் இறந்தவர்களின் சடலம் கடலில் வீச படுவதாக வெளியான காணொளி பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது
உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் பலநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு இடம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் கடலில் வீசப்படுவதாகா கூறி காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலானது. சுமார் 20 நொடிகள் பதிவாகி இருந்த அந்த காணொளியில் ஒவ்வொருத்தராக ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு தலைப்பாக தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை மெக்சிகோ இப்படி தான் மெக்ஸிகோ அப்புறம் படுத்துகின்றது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வெளியான அந்த காணொளியை ஆய்வு செய்ததில், அது 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்றும் காணொளியில் இருப்பது m26 ஹாலோ ஹெலிகாப்டர் என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்தது உயிரில்லாத சடலங்கள் இல்லை என்பதும் அது வான்வெளி சாகசம் செய்யும் வீரர்கள் என்பது உறுதியாகியுள்ளது. அந்த காணொளி வான்வெளி வீரர்கள் சாகசம் செய்யும் போது எடுக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.
https://www.facebook.com/darling.u.mahesh/videos/2662035694078608/