Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த காவல்துறையினரின் விறுவிறு சேஸிங்…!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பாக சிபிசிஐடி மிகவும் துரிதமாக விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவலர்கள் என 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரியவந்தது.

இதையடுத்து நேற்று இரவு திருநெல்வேலி நோக்கி பயணித்த ஸ்ரீதர் கயத்தாறு சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். டிஜிபி உத்தரவையடுத்து கடந்த 24 மணி நேரமாக பம்பரமாக சுழன்று காவல்துறையினர் பணியற்றினார். தெற்கு மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் கூட்டாக செயல்பட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நேற்று இரவு தகவலறிந்த கங்கைகொண்டானில் குழுமிய திருநெல்வேலி டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர் காவல் ஆய்வாளரை வளைத்துப் பிடித்தனர். மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் விரைந்து  காவல்துறையினர் செயல்பட்டனர்.

Categories

Tech |