மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நடைபெற்ற விபத்தில் சுமார் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கி இருப்பதால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மியான்மர் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.