Categories
மாநில செய்திகள்

“சட்டத்தில் தடை “மீண்டும் சிக்கிய காவல்துறை…. அதிகாரம் கொடுத்தது யார்…? பொதுமக்கள் கேள்வி….!!

தமிழக காவல்துறை தற்போது சட்டத்திற்கு எதிரான ஒரு செயலை செய்து பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டு உள்ளது. அது என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக சரியான நீதி கிடைக்க வேண்டுமென தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் காவல்துறையினரின் பல டகால்டி வேலைகள், மக்களை அவர்கள் மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் மீண்டும் காவல்துறை தற்போது புதிய குளறுபடிகளை செய்து சிக்கிக் கொண்டு உள்ளது. அது என்னவென்றால், இந்துத்துவத்தை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்புலமாக செயல்படக்கூடிய சேவாபாரதி என்னும் அமைப்பிற்கு தமிழக காவல்துறை ஊர்காவல் படையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளது.

இதன்படி, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறையின் காக்கி யூனிபார்மை கூட போடாமல் கழுத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற ஐடி கார்டை அணிந்துகொண்டு மக்களிடம் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். ஜாதி, மத ரீதியான எந்த ஒரு அமைப்பும் காவல் துறையோடு இணைந்து செயல்படுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவர்களுக்கு அடையாள அட்டையையும், அனுமதியையும் கொடுத்து இப்படி செயல்பட வைத்தவர் யார் என்ற கேள்வியை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றன.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |