Categories
உலக செய்திகள்

திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள்…. கடற்கரையில் புகைப்படம்… ராட்சத அலையால் ஏற்பட்ட விபரீதம்….!!

புதுமண தம்பதிகளுக்கு கடற்கரையில் காத்திருந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

கலிபோர்னியாவின் ட்ரெஷர் கடற்கரைப் பகுதியில் புகைப்படம் எடுப்பதற்காக திருமணம் முடிந்த கையோடு ஒரு இளம் தம்பதியினர் வந்திருந்தனர். கடற்கரைகளில் உள்ள பாறைகள் மீது ஏறி நின்று போஸ் கொடுத்தனர். அந்த சமயம் அங்கு திடீரென வந்த ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது.

விரைந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்புத் துறையினரும், உள்ளூர் மக்களும் கடலுக்குள் சென்று வெகு நேர போராட்டத்திற்கு பிறகு அந்த ஜோடியை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவத்தை இருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

Categories

Tech |