சேலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தைகடந்துள்ளது.
சேலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே மூன்று முறை இந்த எண்ணிக்கையானது உச்சம் தொட்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் 946 ஆக இருந்த மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் ஒரு பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருக்கிறது.
இதுவரைக்கும் 488 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். நாள்தோறும் தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன ? என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, பரிசோதனை அளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே நாளொன்றுக்கு 200 யிலிருந்து 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு ஆயிரம் பேரைக் கடந்து சோதனை செய்யப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரைக்கும் 40,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்றைய தினம் ஆயிரத்தை கடந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.