தந்தை – மகன் சித்திரவதை தொடர்பாக காவல் சாத்தான்குளத்தில் சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வைக்கிறார்.
சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு சூடுபிடித்து இருக்கின்றது.அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் இந்த வழக்கில் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திருச்செந்தூரில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் CCTV பதிவு பொறுப்பு காவலர் பிரான்சிஸ்யிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட நாளின்போது சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் இந்த விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. CCTVயில் போதிய இடம் இருந்தும் அன்றன்றைக்கு பதிவு செய்யக்கூடிய விடியோ அன்றே அளிக்கப்படுவதாக அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வைக்கிறார்.