மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிய வந்திருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கண்டியூர் என்ற வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்தில் பெண் யானை இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 15 முதல் 20 வயது வரை இருக்கக்கூடிய அந்த பெண் யானையை காதுப் பகுதியில் காயம்பட்ட நிலையில் இறந்து கிடந்ததால் முதற்கட்ட விசாரணையில் எப்படி இறந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ குழுவினர், யானைக்கு உடல்கூராய்வு செய்ததில் அது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
யானையின் காது பகுதி வழியாக சென்ற குண்டு தலைக்கு சென்று மூளையை தாக்கியதில் யானை உடனே உயிரிழந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் கர்ப்பிணி பெண் யானைக்கு அண்ணாச்சி பழத்தில் வெடி வைத்து கொள்ளப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.