Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டு வாடகை – தமிழக அரசுக்கு காலக்கெடு…. அதிரடி காட்டிய நீதிமன்றம்…..!!

கொரோனா காரணமாக மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதியில் தொடர்ந்த வழக்கு தற்போது விசரணைக்கு வந்த போது, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் ஊரடங்கு அமல் இருக்கின்ற காலத்தில் வாடகை வசூலிக்க வேண்டாமென்று அறிவித்திருந்தது. தமிழக அரசு இதற்கான ஒரு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அலெக்ஸாண்டர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அப்போது ஊரடங்கு காலத்தில் பலர் சென்னையை விட்டு சென்று விடுவதாகவும், தற்போது  வீட்டு உரிமையாளர்கள் முழுமையாக வீட்டு வாடகை வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று வாரங்களுக்கு வாடகை வசூலிக்க கூடாது என்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்ததுபோது, அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உரிய கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. இதனையடுத்து, இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Categories

Tech |