தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் .இவர் அடுத்து தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தன் வீட்டில் யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிட்டு ” கார்டனிங்ற்கு அடுத்ததாக நான் என்ஜாய் செய்யும் மற்றொரு விஷயம் யோகா ” என குறிப்பிட்டிருந்தார்.இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் சமந்தா பதிவிட்ட புகைப்படத்தை ஸ்பைடர் மேனோடு ஒப்பிட்டு மீம் தயார் செய்துள்ளனர். அது சமந்தாவிற்கு பிடித்து போக அந்த மீமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.