Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் 3000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு ….!!

மதுரை மாவட்டத்தில் இன்று 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3000யை தாண்டியுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான நகராக மதுரை பார்க்கபடுகிறது. சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் மதுரை மாவட்டத்திற்குள் வந்திருக்கிறார்கள்.  மதுரை மாவட்ட நிர்வாகம் அதிகமானோர் உள்ளே வந்ததால் அவர்கள் முறையாக பரிசோதனை செய்யாமல் மாவட்டத்திற்கு அனுமதித்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த மே மாதம் இறுதிவரை 269 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் இன்று மட்டும் 259 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இது மக்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 290க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 117 ஆக அதிகரித்திருக்கிறது. 878 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும், 39 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |