நேற்று என்.எல்.சியில் பயிலர் வெடித்து விபத்தானத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது என்.எல்.சி நிர்வாகம் நிவாரணம் தொடர்பான அறிவிப்பை வெளிட்டுள்ளது. அதில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும், பாய்லர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Categories