மேஷ ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்வார்கள். சுயவிவரத்தை கண்டிப்பாக பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய பணிகளில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆதாயம் தரும் வகையில் அனைத்து விஷயமே இருக்கும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக தவறாமல் பின்பற்ற வேண்டும்.
புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு கூடும். வசீகரமான தோற்றம் அனைவரையும் நீங்கள் கவருவீர்கள். எந்தத் துறையிலும் இன்று நீங்கள் பிரகாசமாக செயல்படுவீர்கள். புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். புதிய யுக்திகளை கையாண்டு வியாபாரத்தில் சில முன்னேற்றமான பாதை வழிவகுத்துக் கொள்வீர்கள். பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தனித்தன்மையை வெளிப் படுத்துவீர்கள்.
காதலர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். புதிதாக காதல் ஏற்படக் கூடிய சூழலும் உண்டு. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது வெள்ளை நிறம் உங்களுக்கு எப்போதுமே அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.