மிதுன ராசி அன்பர்களே….! இன்று மனதில் சஞ்சலம் ஏற்பட்டு மறையும். எதிலும் கவனமுடன் செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் நல்லது. இப்போது மனதில் உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு நிம்மதியை வழிவகுக்கும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் திறம்பட காரியங்களை செய்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் செல்லும்.
கஷ்டங்களை திறமையாக எதிர்கொண்டு வெற்றியும் பெறுவீர்கள். நுட்பமான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். வெளியிலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியை கொடுப்பதாகவே இருக்கும். சில விஷங்களில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் மனம் குதூகலமாக காணப்படும். சகோதரிகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். தந்தை யாரிடமும் அன்பாகவும் நடந்து கொள்ளுங்கள். சில விஷயங்களில் மட்டும் வாக்கு வாதங்கள் வேண்டாம்.
காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். காதலில் வெற்றி பெறக் கூடிய சூழலும் உண்டு. புதியதாக வயப்படக் கூடிய சூழலும் இன்று அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. பச்சை அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.