கடக ராசி அன்பர்களே …! உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். செயல்களில் உற்சாகம் நிறைந்து காணப்படும். தொழிலில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்புகள் உருவாகும். எதையும் அவசரப்பட்டு மட்டும் எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். எதிலும் நன்மை கொடுப்பதாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று எவருக்கும் எந்த வித வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம்.
உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியில் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும் .புத்துணர்ச்சியுடன் காணப்பட சில விஷயங்களில் கால தாமதத்துடன் அமையும். கவலை வேண்டாம் பொறுமையாக இருங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். பழைய கடனை அடைப்பதற்காக புதிய கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம்.
காதலர்கள் எந்த ஒரு விஷயத்திலும் வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்த கொள்ளுங்கள் அப்பொழுது தான் எல்லா விஷயங்களும் சிறப்பை கொடுக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.