அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு முதலவர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த தமிழக முதலவர் சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ 5 லட்சம் அறிவித்துள்ளார்.