கும்ப ராசி அன்பர்களே …! செயல்களில் உற்சாகம் நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பணவரவு கடன் அடைபடும். குடும்பத்தினருடன் விரும்பி உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம். இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கும். எனவே விவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய கசப்புகள் நீங்கும். நிதி மேலாண்மையில் எப்பொழுதும் ஒரு கவனம் இருக்கட்டும். பழைய கடனை அடைப்பதற்காக புதிய கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாக இருந்தாலும் பேச்சில் மட்டும் நிதானம் வேண்டும்.
பொறுமையாக பேசுங்கள் சொல்வதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் உரையாடுவது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை மற்றும் நீல நிறம்.