Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…தைரியம் உண்டாகும்….மறைமுக எதிர்ப்புகளை சந்திக்கலாம் …!

மீன ராசி அன்பர்களே…!   இன்று நீங்கள் தைரியத்துடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான வளர்ச்சி நிலை உண்டாகும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக் கொள்ள கூடும். பெண்களுக்கு என்றே நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்கு லாபமே வந்து சேரும். பலரின் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வாழ்க்கையில் சில முன்னேற்றப் பாதையை அமைத்துக் கொள்வீர்கள்.

உங்களுடைய வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். திட்டமிட்டு காரியங்களை செய்வதால் அனைத்து காரியங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். மற்றபடி பணியாட்கள் இடம் தேவை இல்லாத கோபப்படுவீர்கள். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பஞ்சாயத்துக்களில் இன்று தலையிடவேண்டாம். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

கலகலப்பு கூடியிருக்கும். அதேபோல குடும்பத்தாரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். முக்கிய பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |