இந்தியா -சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் எல்லை பகுதியில் பிரதமர் மோடி தீடீர் என ஆய்வு நடத்துகின்றார்.
இன்று காலை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா – சீனா எல்லையோரம் உள்ள லடாக் பகுதிக்கு சென்றுள்ளார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராபாத்தும் உள்ளார். இது மிக முக்கியமான ஒரு பயணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கல்வான் பகுதிக்கு பிரதமர் மோடி செல்வாரா ? அல்லது லடாக் பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை சந்திப்பாரா? போன்ற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இது ஒரு பாதுகாப்பு சம்பந்தமான விஷயம், பொதுவாக இப்படியான இடங்களுக்கு பிரதமரோ அல்லது அமைச்சர்களோ செல்லும் போது எந்த அறிவிப்பும் வெளியாகாது. செக்யூரிட்டி காரணங்களுக்காக அது ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கும்.லடாக் பகுதிக்கு பிரதமர் சென்ற பிறகுதான் இந்த தகவலே தற்போது வெளியாகியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் சென்று இருக்கிறார் என்றால் நிச்சயமாக சீன எல்லைப் பிரச்சினை சம்பந்தமாகவும், அதேபோல இந்திய ராணுவம் மற்றும் முப்படைகள் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறது என்பது சம்பந்தமான விரிவான ஆய்வுகளையும், ஆலோசனைகளையும் அங்கு இருக்கக்கூடிய ராணுவ அதிகாரிகளுடன் நடத்துவார். அங்கு இருக்கக்கூடிய ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தான் அங்கு செல்வதாக இருந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த தகவல் வெளியாகி இருந்தது. இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென அந்த பயணம் ரத்து செய்யப்பட்டு, வேறு ஒரு நாள் ராஜ்நாத் சிங் செல்வார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென்று பிரதமர் நரேந்திர மோடியை லடாக் பகுதிக்கு சென்று இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. தொடர்ச்சியாக சீனா தனது ராணுவத்தை அந்த எல்லை பகுதிகளில் குவித்து வரக் கூடிய நிலையில், இந்திய ராணுவ வீரர்களையும் மற்ற அதிகாரிகளையும் சந்தித்து என்ன மாதிரியான விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குவார்கள் என்று சொல்லப்படுகின்றது.