Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிசிடிவி பதிவு கிடைச்சு இருக்கு…. பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம்…. சிபிசிஐடி ஐ.ஜி தகவல் …!!

சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்ஸிடம் விசாரணை செய்வோம் என்று சிபிசிசிடி போலீஸ் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில்  சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் பிடிபட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். தற்போது காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் முத்துராஜ் என்பவரை தேடி வருகின்றோம். இன்னும் 2 நாட்களில் அவர் பிடிபடுவார் என தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி  பதிவுகள் கிடைக்கப் பெற்று உள்ளது. அதை ஆராய்ந்து வருவதாகவும், சிபிசிஐடி இதை நியாயமாக விசாரித்து வருகிறது. இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை, அது கற்பனையானவை. காவல் நிலையத்தில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்ஷையும் விசாரிப்போம் என்று ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |