Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கரிசலாங்கண்ணியின் மருத்துவ பயன்கள் …!!

கீரைகளில் பழக்கீரை வகைகள் காணப்படுகின்றன குறிப்பாக ஒரு சில கீரை வகைகள் உணவாகவும், மருந்தாகவும், பயன்படுத்தக்கூடியவையாக காணப்படுகின்றனர் கீரைகளின் அரசி என வர்ணிக்கப்படும் கரிசலாங்கண்ணிக் கீரையைப்பற்றி நாம் காணலாம்:

கீரை நமது உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. கண் பார்வையைத் தெளிவுப்படுத்துகின்றது. நம் உடல் தசையை விரைக்க செய்கின்றது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தையும் குணப்படுத்துகின்றது. இது மட்டுமல்லாமல் பல வகையான தோல் வியாதிகளுக்கும்  நிவாரணமாக அமைகிறது. கீரையை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளவதாலும் இதன்னுடைய சாற்றை தலையில் தேய்ப்பதனாலும் முடிக்கு கருமை வண்ணம் கொடுக்கின்றது. உடல் எடை, பருமன், மற்றும் தொந்தியைக் கரைக்க விரும்புவோர் இக்கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பயன் கிடைக்கும்.

சோகை, காமாலை, முதலியவற்றையும் கட்டுப்படுத்தும் குணம் கீரை இடையே காணப்படுகின்றது. இது மட்டுமல்லாமல் கீரையை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். கீரை இருமலை கட்டுப்படுத்துவதற்கு நல்ல மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. குழந்தைகளின் மந்த நோய்க்கும், சோகை வீக்கத்திற்கும், கப நோய்க்கும், கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிது கொடுத்து வந்தால் மிக விரைவில் நிவாரணம் கிடைக்கும். கீரையை சுத்தம் செய்து காயவைத்து பொடி செய்து தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வருவதால் உடல் நல்ல நிறம் வரும் தேங்காய் எண்ணெயில் கரிசலாங்கண்ணியின் சாற்றை கலந்து நன்கு காய்த்து வடிகட்டி தலையில் தேய்த்து வர தலைமுடி நன்றாக வளரும்.

Categories

Tech |